Saturday, August 6, 2016

புராணமும் தத்துவமும்





அன்புள்ள ஜெ

வெண்முரசின் இந்தப்பகுதி கொஞ்சம் கஷ்டமாகவே போகிறது. வண்ணக்கடலில் தான் கொஞ்சம் தர்சனங்களும் தத்துவங்களும் பேசப்பட்டன. மிகப்பெரும்பாலும் கதைதான் ஓடியது. இப்போது நேரடியாக வரும் தத்துவங்கள் கொஞ்சம் அன்னியமாகவே இருக்கின்றன. ஆனால் அந்தத்தத்துவங்களை இணைக்கும் கதைகளெல்லாம் புதியவை

ஐதரேய உபநிஷத்தை இயற்றிய மகிதாசரின் கதையைச் சுருக்கமாக எங்கோ வாசித்திருக்கிறேன். இங்கே அவரையே நேரில் பார்க்கமுடிவதுபோலிருந்தது.வெண்முரசு ஒரு புரானம் என்றால் அதன் பயன் இதுதான் என நினைக்கிறேன். நாம் கதையின் வழியாக தத்துவத்தைப்புரிந்துகொள்கிறோம். வகுப்பில் கடாகாசம் மடாகாசம் பற்றி எல்லாம் வேதாந்தபாடம் நடத்தினார்கள். ஆனால் ஒரே ஒரு கதை அதைத்தெளிவாகவே சொல்லிவிட்டது. நன்றி

கெ.ஆர்.கண்ணன்