Friday, August 12, 2016

இரு உவமைகள்




இருவகைக் கயிறுகள் உள்ளன. வலம்புரியும் இடம்புரியும். வலம்புரி சில விலங்குகளை கட்டும். இடம்புரி சிலவற்றை. இருபுரி கயிறுகளும் கையிலிருப்பவன் அனைத்து விலங்குகளையும் கட்டுகிறான்.

 அவன் எனும் சொல்லே பிரம்மம். அதை நாமுரைக்கையில் அவன் ஆணென ஆகிறான். அவன் எனும் அச்சொல் பெண் என ஆகிறது. அவர்கள் முயங்கி மைந்தரை பெற்றெடுக்கிறார்கள்


ஐதரேய ஆரண்யகத்திலுள்ள இவ்விரு உவமைகளையும் வெண்முரசில் வாசித்தபோது முழுமையாகவே வேறு ஒரு அர்த்தம் கிடைத்தது. ஒருபுரி முறுக்குவது இன்னொரு புரி அவிழ்ப்பது என நான் இதுவரை எண்ணியதில்லை

அதேபோல அவன் என்னும் சொல்லை பிரம்மமாக ஆக்கும்போது பிரம்மம் ஆணாகவும் அவன் என்ற சொல் பெண்ணாகவும் ஆகி குழந்தைகளைப்பெருக்கி இந்த பிரபஞ்சமாகிறது என்பது

அறிதலையும் வேதவேள்வியையும் புரிந்துகொள்வதற்கான வரிகள் இவை என்பது அற்புதமனா ஒரு திறப்பு

மகாதேவன்