Friday, August 12, 2016

மழை



ஜெ

இன்றைய மழையைல் குந்தி நாகத்தின் மணமாக கர்ணனை நினைத்துக்கொண்ட இடம் வருகிறது. அங்கே திரௌபதியும் அர்ஜுனனும் கொண்ட மௌனமும் அர்த்தச்செறிவானது

தத்துவ விவாதங்களுக்கு நடுவே இப்படி ஒரு அழகிய வர்ணனை மிகுந்த நிறைவை அளித்தது. அந்த மழை சும்மா பெய்யவில்லை. நீரில் நெருப்பு என்பதை குறியீடாகக் காட்டவே பெய்கிறது எனத் தெரிகிறது. ஆனாலும் மழைவர்ணனையில் ஆழ்ந்துபோனேன்

ஜெயராமன்