Monday, August 8, 2016

நற்றமிழ்ச்சொற்கள்



வெண்முரசில் நற்றமிழ்ச்சொற்கள் புதிதுபுதிதாக வந்துகொண்டே இருக்கின்றன. எரிகுளம், நாற்களம், பிறவிநூல் போன்ற சொற்கள் பலமுறை வந்துவிட்டன. பொழுதிணைவு வணக்கம் (சந்த்யாவந்தனம்), புடவிக்கிறைவன் ஆலயம் (விஸ்வநாதர் கோயில்) போன்றவை ஓரிருமுறை வந்திருக்கின்றன. நேற்றைய அத்தியாயத்தில் அதுபோல் வந்த ஒருசொல் 'மலரமர்வு'. பத்மாசனத்தைக் குறிக்கும் சொல்.

//இருகால்களையும் மலரமர்வில் மடித்து கைகளை மடிமேல் விடுதலென மலரவைத்து தருமன் அமர்ந்திருந்தார்//

மேலும் வேதமந்திரங்களின் மொழிபெயர்ப்பும் பலமுறை இடம்பெற்றிருக்கிறது. (முதன்முறையாக) நேற்றைய பகுதியில் இடம்பெற்ற வரிகளின் மூலத்தைக் கண்டறிய முயன்றேன். ஐதரேய உபநிடதத்தின் சாந்திமந்திரம் -  அதிலேயே கொடுக்கப்பட்டுமிருந்தது.
https://en.wikipedia.org/wiki/Shanti_Mantra#Aitareya_Upanishad


திருமூலநாதன்