Tuesday, August 9, 2016

கௌரவர் பிறப்பு


ஜெயமோகன் ஐயா,

தங்கள் புதிய வாசகனின் நெடுசாண் வணக்கம். கௌரவர்களின் பிறப்பு புராண நூல்களில் நூறு பிண்டம் உருட்டி மந்திரம் ஓதி முதலில் துரியோதனன் பிறகு துச்சாதனன் என்று நீல்கிறது. தங்கள் எழுத்தில் வேறு விதத்தில் குறுப்பிட்டுள்ளிர். என் ஐயத்தை விலக்கு மாறு கேட்டுகொள்கிறேன்.


இவண்,
சுப்பாராவ்.


மகாபாரதத்திலேயெ காந்தரியர் பதினொருவரின் பெயர்களும் உள்ளன. கௌரவர்கள் அவர்களுக்குப்பிறந்தவர்கள் என்பதும் அதில் உள்ளதுதான். வியாசர் உருட்டிய உருளைகளில் இருந்து பிறந்தவர்கள் என்பது இன்னொரு பாடம். அது ஒரு வாய்மொழிக்கதையாக இருக்கலாம். மகாபாரதம் ஒரே கதை அல்ல. அது பலவகைக் கதைகளின் தொகுதி

ஜெ