Saturday, August 6, 2016

நஞ்சு



ஜெமோ

வெண்முரசில் எவ்வளவோ பூடகமான நுட்பமான பகுதிகள் வந்துவிட்டன. ஆனால் பாஞ்சாலி சொல்லும் இந்த இடம் ஒரு நஞ்சு நிறைந்த இடம்

எத்தனை முறை உங்கள் தமையன் முகத்தில் காறி உமிழ்ந்தீர்கள் என நான் தொட்டெண்ணிச் சொல்ல முடியும். எத்தனை முறை அவர் அமர்ந்த அரியணையில் அமர்ந்தெழுந்தது உங்கள் அகம் என நான் அறிவேன். என்னை அணையும்போது தமையனை வெல்லும் உவகையை அடையாதவர் உங்களில் எவர்?”

அதிலும் அந்தக்கடைசி வரி அப்பட்டமானது. அதை திடீரென்று வாசித்தபோது எழுந்த அதிர்ச்சி மிகப்பெரியது. உடனே அர்ஜுனன் கொதித்துப்போய் அதை வேறு இடத்துக்குக் கொண்டுபோகிறான்.

லட்சுமணன் முருகானந்தம்