Wednesday, August 3, 2016

ஜெகோவாவும் ஏசுவும்





அன்புள்ள ஜெ

வெண்முரசை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். சிலசமயம் தேங்கிவிடும். சிலசமயம் வாசித்துப்போதாமலாகி பழைய அத்தியாயங்களை எல்லாம் தேடி வாசிப்பேன். சிலசமயம் ஒரே அத்தியயமே வாசித்து முடிக்கமாலும் இருக்கும். சென்ற வெண்முரசில் சௌனகர் சொல்லும் வேதமெய்யியல் சுருக்கமாகவும் அதேசமயம் அடர்த்தியாகவும் இருந்தது. அதை இதற்குமுன்னால் இதேபோல வந்த பல நீதிகளுடன் சேர்த்துத்தான் புரிந்துகொள்ளவேண்டும் என தோன்றியது. 


 இயலாமையை தன் தகுதியெனக்கொள்பவனே செயலின்மையை அறமென மாற்றிக்கொள்கிறான். தோல்வியை எந்நிலையிலும் சிறப்புறுத்துவதில்லை மெய்வேதம். வேதம் வென்றவர்களுக்குரியது. வெல்ல எழுந்தவன் கையில் படைக்கலம், நெறிச்சாலையில் கொலைவாள்.



என்றவரிகளை வாசிக்கையில் வேதம் என்பதை மதநூல் அல்லது canon என்று புரிந்துகொண்டால் பல தெளிவுகள் கிடைக்கும் என தோன்றியது. சில மதநூல்கள் கொலையையும் வென்றுவாழ்வதையும் சொல்கின்றன. சில வேதநூல்கள் அகிம்சையை ஒத்துவாழ்ந்தலைச் சொல்கின்றன. வேதநூல் சொல்வது மெய்யாகவே இருக்கமுடியும் அது மாறாததாகவே இருந்தாகவேண்டும் என நினைக்காமலிருந்தால் இதைப்புரிந்துகொள்வது கடினம் அல்ல.


மனிதன் இந்தப்பூமியில் தங்கிவழ்வதே கடினமானபோராட்டமக இருந்த காலகட்டத்திலுள்ள நூல்களெல்லாமே வெற்றியைத்தான் முக்கியமானவையாகச் சொன்னார்கள். பைபிளிலேயே இந்த வேறுபாடு உள்ளது. பழைய ஏற்பாடு பைபிளில் யகோவா கொலைத்தெய்வம். ஆனால் புதிய ஏற்பாடு கருனையை பேசுகிறது. உண்மையில் பழைய ஏற்பாட்டுக்கு எதிரானதே புதிய ஏற்பாடு என்று சொல்லமுடியும். அதன் நீட்சிதான் இது ஆனால் அதை மறுத்தும் வளர்ந்தும் எழுந்தது. இங்கே வேதங்களுக்கு இடையே நிகழும் போராட்டத்தைச் சொல்லும்போது பைபிள் இப்படி பரிணாமம் அடைந்ததை சொல்லத்தோன்றியது.

செம்மணி அருணாச்சலம்