Tuesday, August 9, 2016

அஸ்வதந்தம்



விதுரரின் கையிலுள்ள அஸ்வதந்தம் எது? அதை பலகோணங்களில் நானே எண்ணிப்பார்த்திருக்கிறேன். வைரம் என்பதே வெண்முரசில் ‘ஆசை’ என்றுதான் வருகிறது. சரியாகச் சொன்னால் காமம். சுயஒளியில்லாத  கல். நாம் நம் கண்களால் ஒளிகொடுக்கிரோம். அந்த மோகத்திலிருந்து விடுபட முடியாமல் தடுக்கிறோம்.

திருதராஷ்டிரரால் பாண்டுவுக்குக் கொடுக்கப்பட்டது. பாண்டுவிடமிருந்து விதுரருக்கு வந்தது அஸ்வதந்தம். அது அஸ்தினபுரியின்முடியுரிமைக்கு சமானமாக அளிக்கப்பட்டது. அப்படிஎன்றால் அது அரசபதவி. அதுபாண்டு அளித்தது. ஒருவகையில் அது அஸ்தினபுரி மட்டும் அல்ல. குந்தியும்கூடத்தான்

அத்தனை வயதுக்குப்பின்னரும் நிறைவடையாத காதல் ஒரு வைரமாக இருப்பதைக் காண ஆச்சரியம்தான். வைரம் அழகியது. ஆனால் விஷமும் கூட. உள்ளே போகக்கூடாது

சுவாமி