அன்புள்ள ஜெயமோகன்
ஒவ்வொரு கதைக்கும்
எத்தனை நுட்பங்கள் என்று வியக்கிறேன். ஒவ்வொருவராகக் கதைசொல்ல வருகிறார்கள். அரசர்களுக்கு,
அதாவது வேதமரபுக்குக் கதைசொல்ல வருபவர் ஏகாக்ஷர். அந்த மனிதர் ஒரு விந்தையான அம்சத்தை
கதையில் கொண்டுவந்துசேர்க்கிறார். கிளாஸிக் கேரக்டர் என்பது எப்போதும் அதிலிருக்கும்
வியப்பு அம்சத்தால்தான் உருவாகிறது. அதை குழந்தைகளுக்குச் சொல்ல முடியும். ஏகாக்ஷர்
கிரேக்கபுராணங்களில் வரும் தொன்மம். ஆனால் இங்கே அதற்குக் குறியீட்டு அர்த்தம் உள்ளது.
ஒற்றைப்பார்வை கொண்டவர். அந்தத் தரப்பே ஒற்றைப்பார்வைதான் கொண்டிருக்கிறது.
ஜெயராமன்