அன்புள்ள ஜெயமோகன் சார்,
கர்ணனின் அமைச்சர்களாக ஹரிதர், சிவதர் என்று இருவர் இருப்பதாக வெண்முரசு சொல்கிறது. கர்ணன் ஷத்ரிய, வைசிய , குலங்களை மட்டும் அல்லாமல் சூதற்குலங்களையும் சேர்த்து அரியணை அமர்ந்து தன்னை அரசனாக உணர்கிறான். அதேபோலவே அமைச்சர்களாக இரு வழிமுறையையும் சேர்ந்தவர்களை வைத்துகொண்டிருக்கிறான். வில்லை செய்பவரின் பெயர் காளிகர். பழைய அன்னையின் பெயர். வில்லுக்கு சிவதர் சிவதனுஷ் என்கிறார். அதன் பெயர் விஜயம். அதை செய்ய இரும்பு வந்த ஊர் எருமைநாடு [ எருமைநாடு என்றால் மைசூரு எனவும் அவர்கள் மகிஷியை தொழுபவர்கள் எனவும் ஆனந்தவிகடனில் சி. மகேந்திரன் அவர்கள் எழுதிய தொடரில் படித்தேன்] ஈயமும் கரியும் கலிங்கத்தில் இருந்து வருகிறது. எல்லாமே வில்லின் ஸ்பேர் பார்ட்ஸ்கள் போலவே இருக்கிறது.
சொல்லை வரைபடமாக்கி, வரைபடத்தை பருப்பொருளாக்க காளிதரும் சீடர்களும் முயல்வதும், சொல் வில்லாக எழுந்து வருவதும் வழக்கம் போல கர்ணன் அதை சந்தேகபடுவதும் எல்லாம் மாயாஜாலம் போல் இருக்கிறது.ரசக்கலை என்று காளிதர் கூறுவது உலோகங்களுக்கு மட்டும் அல்ல நம் மனதை,மனிதர்களை குறித்தும்தான். பொன்னாக வேண்டும்.
regards,
stephen raj kulasekaran.p