Friday, January 4, 2019

ஐந்தாண்டுகள்



அன்பின் ஜெ,

ஐந்து வருடங்களாய் தினசரி வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டிருக்கிறது வெண்முரசு எனும் நிகழ்காவியம். நள்ளிரவில் காத்திருந்து படித்து தூக்கம் தொலைத்த பகுதிகள், பணியிடத்தில், பயணங்களில், விழாக்களில், கூடுகைகளில் என எங்கும் இதை வாசித்துக்கொண்டு இருப்பை மறந்த பகுதிகள் என சில மனதில் விரிகிறது.

வண்ணக்கடல் வரை தங்களுக்கு சில கடிதங்கள் கட்டுரைகள் அனுப்பிகொண்டிருந்தேன். அவ்வழக்கத்தை இனி தொடரவேண்டும்.
இப்போது வெண்முரசு discussions தள கடிதங்களில் நாகராஜன்(கட்டமைப்பு), சாரங்கன்(பார்வைகள் - கார்கடல் முன்பாகவே!!!!) மற்றும் அருணாச்சலம் அவர்களின் கடிதங்கள் சிறப்பானவை.

2014 இல் முதற்கனல் தொடங்கியபோது என் மகளுக்கு ஒரு வயது, இன்று ஆறு. 19 புத்தகங்கள் இதுவரை. இமைக்கணம், செந்நா வேங்கை, திசைத்தேர் வெள்ளம் அச்சுபதிப்புகள் இல்லாமலே, இதுவரையிலான புத்தக பக்கங்கள் மலைப்பை தருகின்றன. (பார்க்க இணைக்கப்பட்ட புகைப்படம்) 

நலம் பிரார்த்திக்கும்,
சதீஷ் (பெங்களுரு).