அன்புள்ள ஜெ
பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை-
என்ற வரியில் கர்ணனின் துயர் முழுமையாகவே வெளிப்பட்டுவிட்டது. கர்ணன் இந்நாவல் முழுக்க
எக்ஸ்பிரஸிவ் அல்லாத மனிதனாகவே வந்துகொண்டிருக்கிறான். அவனுடைய உனர்ச்சிகளையே அவன்
சரியாக உணர்வதில்லை. எண்ணங்கள் மிகக்குறைவு. பெரும்பாலும் கனவுகள் வழியாகவே தன் மனதின்
ஆழத்தை அறிகிறான். தன்னைத்தானே கூர்ந்துபார்ப்பதும் அலசி ஆராய்வதும் கிடையாது. கர்ணனை
நாம் அறிந்த நம் அப்பாக்களுடன் ஒப்பிட்டுத்தான் பார்க்கமுடிகிறது
சாந்தகுமார்