Monday, January 7, 2019

துரியோதனன்



அன்புள்ள ஜெ,

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

நான் வெண்முரசை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வாசித்து வருகிறேன். நாவல்  பாண்டவர்கள் பக்கமோ கொளரவர் பக்கமோ முழுவதும் சாராமல் அவரவர்க்கான நியாயங்களை பேசியே செல்கிறது. இருப்பினும் திரௌபதி, கிருஷ்ணன், அர்ஜுனன், பீமன், தர்மன், கர்ணன் போன்று துரியோதனனுக்கு ஏன் தனி நாவல் இல்லை?.

நன்றி,
தங்கப்பாண்டி ஆறுமுகம்
பெங்களூரூ


அன்புள்ள தங்கபாண்டி

மகாபாரதத்தில் துரியோதனனின் இடம் எதுவோ அதுவே வெண்முரசிலும். பிற கதைமாந்தரும் அப்படியே. அந்த இடம் முழுமையாகச் சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே விரிவாக்கம்

துரியோதனனும் அவ்வாறு விரிவாக்கம் செய்யப்படலாம்

ஜெ