அன்புள்ள ஜெ
தீயின் எடை முடியும் இடம் எனக்கு பல கேள்விகளை உருவாக்கியது.
எல்லா அறங்களையும் மீறி கொடுமை செய்துவிட்டு வந்து அமர்ந்திருக்கிறார்கள் கிருபர் கிருதவர்மன்
அஸ்வத்தாமன் ஆகியோர். ஆனால் அவர்களுக்கு கலிதேவன் அங்கீகாரம் அளிக்கவில்லை. கலை கொடிய
காலகட்டத்தின் தெய்வம். அப்படியென்றால் அதை அங்கீகரித்திருக்கவேண்டுமே. பழைய வகையான
உபன்யாஸங்களில் கிருபர் முதலானோர் செய்த கொடிய செயல் கலி பிறந்துவிட்டதற்கான ஆதாரம்
என்று சொல்வார்கள். ஆனால் இங்கே அதை கலி ஏற்கவே இல்லை என்று காட்டுகிறீர்கள். கலி மிகமிக
சிறப்பான ஒரு தோற்றத்தில் காட்டப்படுகிறார். கலியே ஆனாலும் அது ஏற்காத சில நடவடிக்கைகள்
உண்டு என்பதுதான் இதற்குப்பொருளா என்ன?
மகேஷ்.கே