அன்புள்ள ஜெ
வெண்முரசில் என்ன
இல்லை என்பதை நான் வாசித்துக்கொண்டே இருந்தேன். போர் நிகழ்ந்த முழு அத்தியாயத்திலும்
பயந்து ஓடியவர்கள் பற்றிச் சொல்லப்படவே இல்லை. ஒருவேளை இந்தமாதிரியான கிளாஸிக் கதைகள்
அதைச் சொல்வதில்லையோ என்று நினைத்தேன். ஏனென்றால் மகாபாரதம் ராமாயணம் போன்ற மூலக்கதைகளில்
அதெல்லாம் இல்லை. ஆனால் அடக்கம்செய்வது வரை அவ்வளவு டீடெயில் கொடுத்த நாவலில் பயந்து
ஓடியவர்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.
ஆனால் கடைசியில்
அவர்கள் அனைவரும் காட்டில் ஒருவகையான டிரைப்களாக இருப்பதைக் கண்டது ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் இந்த யதார்த்தமும் நம்மிடம் உள்ளது. உலகப்போரில் இப்படி ஓடிப்போனவர்களும் தவறவிடப்பட்டவர்களும்
டிரைபல் வாழ்க்கைக்குச் சென்றது வரலாறு. அதை நான் எண்ணிக்கொண்டேன். மிகச்சரியாக தீயின்
எடை அவர்களை வந்துசேர்ந்துவிட்டது
ராஜ்க்குமார்