அன்புள்ள ஜெ,
தீயின் எடை அதன்
இறுதியில் ஒரு பெரிய தளர்வில் முடியுமென நினைத்தேன். கடைசி அத்தியாயங்களில் உருவான
பரபரப்பு ஆச்சரியமளித்தது. ஆனால் அப்படித்தான் அது நடைபெறும் என்றும் தோன்றியது. இவ்வளவு
காலமாக அம்புகள் காத்திருந்தன. அவை யாரைக்கொல்லும்? கண்டிப்பாக அஸ்தினபுரியின் மக்களைத்தான்.
ஏனென்றால் அந்தப்போரே அவர்களுக்குள் நடைபெற்றதுதானே? அந்த அம்புகள் அத்தனை காலம் அங்கே
காத்திருந்தது அதற்குத்தான். அந்த கொலைகள் எஞ்சியவர்களை அழிப்பதற்காக. அவை அஸ்தினபுரியை
கோழைகளின் ரத்தத்திலிருந்து காத்தன. சத்யவதி அவற்றை நிறுவியதன் நோக்கம் அஸ்தினபுரியின்
பெண்கள் கோழைகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத்தான். சத்யவதியின் வடிவாகவே
சம்வஹை வந்திருக்கிறாள்
சாரதா