அன்புள்ள ஜெ,
காந்தாரியைப் பேரன்னை
என்று சொல்லும் கடிதங்களை வாசித்தேன். தீயின் எடை வந்து காந்தாரியில் முடிவதை நானும்
ஆச்சரியமாகவே வாசித்தேன். ஆனால் அதுவே உகந்த அழகான முடிவு. காந்தாரிவிலாபம் என்னும்
ஸ்திரீபர்வத்தைப்பற்றி பேசும்போது முன்பு பௌராணிகர் ஒருவர் சொன்னார். அது குருசேத்திர
மண்ணே வந்து புலம்புவதுபோல என்று. எனக்கு அதை நினைவுகூரும்போது பாரதவர்ஷமே அழுதுபுலம்புவதுபோல
என்று தோன்றியிருக்கிறது. அது ஒரு மிகப்பெரிய ஒப்பாரிப்பாட்டு. பாரத அன்னையாகவே அங்கே
இருப்பவள் காந்தாரிதான்
ஜெயக்குமார்