Thursday, October 31, 2019

ஒரு கேள்வி





தீச்சுடர் மெதுவாகவே செல்கிறது,  போருக்கு பின் வாழ்க்கை இப்படித்தான் செல்லும். மிக மெதுவாக.  கனகரை முன்னரே அறிந்திருந்தோம். சுட்டியானவர்,  ஜயத்ரதனின் மைந்தன் நகர் புகும் போது எங்கு சென்றார்களோ என விதுரரை பயந்து கேட்கிறார்.  சுஜாதனை பாய்காட் பண்ணியதும் நினைவிலுள்ளது.  எண்ணி நோக்க வேண்டுமென.  



எமது கேள்வி : 

போர் முடிந்தவுடன்,  பாண்டவர்கள் அஸ்வத்தாமனை தேடிப் போக வேண்டுமல்லவா?  மைந்தர்களின் பழிக்காக?  பீமன் முதலில் சென்று வஞ்சம் தீர்க்க முயல்வானல்லவா?  அது தானே அவர்களின் இயல்பு.  ஏன் தள்ளிப் போடுகிறீர்கள். 

Regards 
Siva