Saturday, August 8, 2020

தவளைவேதம்


அன்புள்ள ஜெ,

நான் சின்னவயசு முதலே தவளைகளைப்பற்றிய ஆழமான அருவருப்பு கொண்டிருந்தேன். காரணம் சின்னவயசிலே சொறித்தவளை என்றுதான் சொல்வார்கள். தொட்டால் சொறிவரும் என்று சொன்னார்கள். தவளையத்தொடவேண்டும் என்றார்கள் என்று நானே பயாலஜி இல்லாத கோர்சாக எடுத்துப் படித்தேன். இப்போது கம்ப்யூட்டர்வேலை

ஆனால் மழைப்பாடலை போனவருடம் படித்து முடித்தபோதிலிருந்து தவளைகளைப் பற்றிய எண்ணமே மாறிவிட்டது. தவளைகளை நான் இன்றைக்கு ஒரு பெரிய கனிவோடுதான் பார்க்கிறேன். அவற்றைப் பார்த்தாலே மழை ஞாபகம்தான். மழையை பாடிப்பாடி வரவழைப்பவை அவை என்ற சித்திரம் மனதில் பதிந்த்விட்டது. மழைப்பாடல் என்றால் தவளைப்பாடல்கள்தான். தவளை ஓதுவது வேதம்தான் என்று நீங்கள் சொல்கிறிர்கள் என்று நினைத்திருந்தேன். மழைப்பாடல் வாசித்து முடித்து ரெஃபர் செய்தபோதுதான் தெரிகிறது மாண்டூக்யம் என்று வேதமே தவளைப்பாடலை புகழ்கிறது என்று

மழைப்பாடலின் முடிவில் அந்த துக்கத்தில் மழையை வரவழைத்து தவளைகள் பாடும் பாடல் வெண்முரசின் உச்சம்

நவீன் பாலகிருஷ்ணன்