அன்புள்ள ஜெ
பிரயாகையில் திரௌபதியின் திருமணத்தில் இந்த இடம் வருகிறது
இப்பகுதியை ஒரு டைரியில் குறித்து வைத்திருந்தேன். இந்த இடத்தை
என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாவலின் கடைசிவரை வாசித்து இதன் அர்த்தமென்ன என்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
அர்ஜுனனுக்கு மருதம். அது காமத்தின் மரம். பீமனுக்கு வேங்கை.
அது குறிஞ்சித்திணைக்கு உரியது. காதல். கொன்றை நகுலனுக்கு. செண்பகம் சகாதேவனுக்கு.
யுதிஷ்டிரனுக்கு ஏன் பிரிவு, துயர் ஆகியவற்றின் அடையாளமான பாலை?
செந்தமிழ்க்கிழார்