அன்புள்ள ஜெ
வெண்முரசின் முதல் 12 நாவல்களையும்
முடித்து தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்னால் இத்தனை பக்கங்களை வாசிக்கமுடியும்
என்று நினைத்துப்பார்த்ததே இல்லை. இதைச் சாத்தியமாக்கியது நாவலின் வாசிப்புத்தன்மையும் வேகமும்தான்.
தங்குதடையில்லாத ஓட்டம்தான் இந்நாவலின் அழகு என நினைக்கிறேன்.பெரும்பாலும் தெரிந்த
கதைக்குள் இத்தனை மனநாடகங்களும் அரசியல்நுட்பங்களும் பண்பாட்டு அம்சங்களும் குறியீடுகளும்
செறிந்திருப்பதென்பது நம்பவே முடியாததாகவே இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருவகையில்
மனதைக் கவர்வதாக இருந்தாலும் நிலையில்லாமல் கொந்தளிப்புடன் அலையும் பூரிசிரவசாகவே என்னை
நான் உணர்கிறேன்
ராஜன் கருணா