Saturday, August 8, 2020

பசுமைநிலம்



அன்புள்ள ஜெ

மழைப்பாடல் நாவலை நான் நினைவில் வைத்திருப்பதெல்லாம் பச்சைப்பசேலென்று ஈரமான இடத்தில் நிகழ்வதாகத்தான். ஏனென்று தெரியவில்லை. இத்தனைக்கும் அதில் காந்தாரம் வருகிறது. வரண்ட காந்தாரத்தின் சிவந்த மண்ணும் யாதவநிலத்தின் பச்சைப்பசேலென்ற மண்ணும் அதில் இணையாகச் சொல்லப்படுகின்றன. இரண்டு நிலங்களுக்கும் இடையே நடக்கும் போராகத்தான் அந்த நாவலே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏன் எனக்கு மழைப்பாடல் பச்சையாகத் தெரிந்தது? அதை மீண்டும் மழைப்பாடலை படங்களுடன் படிக்கும்போது தெரிந்தது. அதில் பச்சைநில வர்னனை மிகுதி. மழைவர்ணனை மிகுதி. கூடவே ஷன்முகவேலும் பச்சைநிறமான ஏராளமான படங்களை வரைந்து வைத்திருக்கிறார்

ராஜ்குமார்