Wednesday, August 5, 2020

பகடை



அன்புள்ள ஜெ,

வெண்முரசின் கட்டமைப்பில் இதுவரை நான் கேட்டிராத சில பழங்கதைகள் ஊடுருவுவதை அவ்வப்போது குறித்து வைத்திருக்கிறேன். அவை நீங்களே புனைந்தவையாக இருக்கலாம். ஆனால் அவை மகாபாரதத்தின் கட்டமைப்பையும் அழகியலையும் கொண்டிருக்கின்றன. வெண்முரசை புனைந்து வரும்போது அங்கே ஒரு தத்துவப் பிரச்சினையைக் கண்டு நீங்கள் அதை உருவாக்குகிறீர்கள் என நினைக்கிறேன்.

களிற்றியானை நிரை நாவலில் ஆதன் தன் ஊரிலே கேள்விப்படும்அஸ்தினபுரியின் கதையில் யுதிஷ்டிரரும் துரியோதனனும் பகடைக்கான காய்களை வேறுவேறு எலும்புகளிலிருந்து உருவாக்கும் இடத்தை உதாரணமாகச் சொல்வேன். வேள்விக்கான பெருந்தியாகம் செய்த ஒரு முனிவரின் எலும்பு யுதிஷ்டிரன் கையில் பகடைக்காய் ஆகியது. பெற்றபிள்ளைக்காக கொடூரமான கொலைகளைச் செய்த அன்னையின் எலும்பு துரியோதனன் கையில் பகடைக்காய் ஆகியது. ஜெயித்தது அன்னையின் எலும்புதான்

என்ன சொல்கிறது இந்தக் கதை? எவருமே இக்கதையைப் பற்றி பேசியதாக தெரியவில்லை. என்ன சொல்லவருகிறது? தர்மத்தை அடிப்படையான இச்சை, அல்லது உயிரின் வெறி ஜெயித்தது என்றா?

ஏ.பாஸ்கர்