ஜெ
இன்றைய வெண்முரசு அத்தியாயத்தில் பீமனுக்கும் குந்திக்குமான உரையாடலை பலமுரை வாசித்தேன். அந்தக்கதையின் மாயத்தில் இருந்து திடீரென்று நேரடியாக வந்து தத்துவத்தில் விழுந்தது. சாதாரணமாக ஓரிரு வரிகளில் முடிந்தாலும் நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது.
வாழ்க்கையில் எதற்காகவோ போராடுகிறோம். அதை அடைந்தால் அது நமக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கும் என்பதற்கு என்ன ஆதாரம்? அப்படியென்றால் ஏன் போராடவேண்டும்? இயல்பாக சந்தோசமாக இருக்கலாமே- இது பீமன்
இருக்கலாம். ஆனால் அது உன்னுடைய ஆற்றல்களை எல்லாம் பய்ன்படுத்தும் வாழ்க்கை அல்ல. அது தேங்கிப்போனது. ஆற்றல்களை எல்லாம் பயன்படுத்தும் வாழ்க்கையிலேயே இன்பம் உள்ளது. தேங்கிப்போன வாழ்க்கை இருட்டாகிவிடும்- இது குந்தி
தேங்கிப்போன வாழ்க்கையை வைக்கவேண்டும் என்றால் யோகியாக இருக்கவேண்டும். உள்ளுக்குள் ரொம்ப பயணம் செய்யவேண்டும். ஞானம் விபூதி என்று போய்க்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கர்மயோகம்தான் சிறந்தது
கீதாசாரத்தையே குந்தி அற்புதமாகச் சொல்லிவிட்டாள்.
சந்திரா