ஜெ
இன்றைய பிரயாகையில் தமோ குணம் கொண்ட வாழ்க்கையில் புலன்கள் ஒவ்வொன்றாக அணைவதற்கு விளக்குகள் அணைந்துகொண்டே போகும் மாளிகை என்று உவமித்திருந்த இடம் மிகச்சிறப்பு
அதையே நினைத்துக்கொண்டிருந்தேன். கப்பல் நீரிலே மூழ்கிப்போவதுபோல அந்த வீடு இருளிலே மூழ்கி மறைந்துவிடும்
மிருகங்கள் தமஸில் வாழ்கின்றன என்று சில நூல்கள் சொல்கின்றன. குந்தி அதைத்தான் சொல்கின்றாள். ஆனால் எல்லா யோகமுறைகளிலும் அப்படிச் சொல்லப்படுவதில்லை. அவையும் தங்கள் பாதையில் ஞானம் அடைகின்றன என்பதே சொல்லப்படுகிறது
வெண்முரசில் அந்தப்பார்வைதான் மேலோங்கி வருகிறது. பல மிருகங்கள் அழகான கதாபாத்திரங்களகா வருகின்ரன
சிவம்