Saturday, January 24, 2015

காமமும் பிரயாகையும்





ஜெ

வெண்முரசில் பிரயாகைக்கு உரிய சிறப்பு என்னவென்றால் இது adolescent வயதை அடைந்துவிட்ட நாவல் என்பதுதான். பிறநாவல்களில் இல்லாத அளவுக்கு இதில் காம\த்தைப்பற்றிய நுட்பமான intuitive observations உள்ளன. பலமுறை வாசித்தால்கூட சரியாக உள்வாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு அவை உள்ளன

அர்ஜுனனை அந்த மசாஜ் உதவியாளன் குளிப்பாட்டியபடி பேசும் இடம் ஓர் உதாரண,ம் அதில் அவன் ஆண்களின் காம மனோவியலைப்பற்றி விரிவாகப்பேசுகிறான். அதேபோல மாயையும் பாஞ்சாலியும் ரதத்திலே போய்க்கொண்டு பேசும் இடம். அதன்வழியாக பெண்களின் காமத்தைப்பற்றிய விரிவான பேச்சு வருகிறது.

இவ்விரண்டு இடங்களைப்பற்ரியும் ரொம்பபெர் எடுத்துச் சொல்லவில்லை. நான் அதையெல்லாம் வாசித்தபோது சரிதான் கடிதம் போட்டு கிழி கிழி என்று கிழிகக்ப்போகிறார்கள் என்று நினைத்தேன். நம்மவர்களுக்கு காமம் என்றால் அப்பட்டமாக நேரடியாக உடலைச் சொன்னால்தான் காமம். அதாவது nudity யைத்தான் காமம் என்கிறர்கள். மனதின் காமத்தை கடந்து சென்றுவிடுகிறார்கள்

மனதில் காமத்தில் என்ன நிகழும் என்று சொன்ன ஒரு முக்கியமான தமிழிலக்கியப்பகுதி இதுதான்

செந்தில் ஆர்