Saturday, January 17, 2015

பெருங்கருணைப் பேராறு:


தருமனின் கடிதத்தை படித்தததிலிருந்து என்  கண்கள் கண்ணீரில் மூழ்கி உள்ளன. இன்னும் என்னால் அதிலிருந்து விடுபடமுடியவில்லை.  விடுபட விரும்பவில்லை. எம் தந்தை அண்ணல் காந்தி உயிருடன் வந்து என்னுடன் உரையாடியதைப்போல உள்ளது.   தன் கீழ் உள்ளவரிடம், தன்னை நேசிப்பவரிடம்,  ஏன் தான் அறியாத மற்ற மனிதர்களிடம் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களிடம் பரிவு காட்டுவது கருணை.  தனக்கு தன் மனம் அறிந்து பெருந்தீங்கு செய்த ஒருவரின் மேலும் பரிவு காட்டுவது பெருங்கருணை. 

தருமன் செய்வது முட்டாள்தனம் என்று கூட சொல்லலாம். ஒருவேளை உண்மை தெரிந்து  திருதராஷ்ட்டிரர் துரியோதனன், சகுனி முதலியவர்களை கொன்றிருந்தால் பெரிய மகாபாரதப்போரே நடந்திடாமல் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நெறி தவற விரும்பாத தருமன் இங்கு பொய்யுரைக்கிறான். துரியோதனாதிகளை மன்னிக்கிறான். அவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்கவைக்கிறான். அவர்களின் உள்ளே உறையும் மனிதத்தில் நம்பிக்கை வைக்கிறான். அவன் கடிதத்தை படித்ததிலிருந்து என் மனதில் மாணிக்கவாசசகரின் திருவாசகத்தில் வரும் ' பெருங்கருணைப்  பேராறே!' என்ற  சொற்றடர் ஒலித்தவண்ணம் உள்ளது, 

துரைவேல்