Saturday, August 15, 2015

தரிசனம் நிகழ்ந்த கணம்.!

இறைவன் மண்ணில் அவதாரம் எடுத்த கதையில், அவனைக் காண்பதே பேறு.
அவன் சொல் கேட்பது.. அவன் கை நம்மை தொடுவது...
அவனோடு பயணிப்பது... அவனோடு பொருதுவது...! எத்தனை எத்தனை இன்பம் அவனை காதல் செய்வது!
அதை அவன் சொல்லி கேட்பது..
ஒற்றன் கூட கொடுத்து வைத்தவன்தான்!!!
/ஜாம்பவான் கேட்டார் ‘இளையோனே, எங்கள் குலத்திற்கு மூதாதையர் அளித்த சொல்லென ஒன்றுள்ளது. ராகவ ராமனன்றி எவர் முன்னும் நாங்கள் தோள் தாழ்த்த நேராது. எங்ஙனம் நிகழ்ந்தது இது? நீ யார்?’ நீலமுகம் விரிய விழிசுடர புன்னகைத்து இளைய யாதவன் சொன்னான் ‘அவனே நான்!’ எந்தையரே, என் குலத்தீரே, அக்கணம் அதை நானும் உணர்ந்தேன். அவன் இவனே என.”
“இரு கைகளையும் தலைமேல் கூப்பி எழுந்து இளையவன் கால்களைத் தொட்டு ஜாம்பவான் சொன்னார் ‘எந்தையே இத்தனை நாள் கழித்து தங்கள் இணையடி எங்கள் மண் சேர ஊழ் கனிந்துள்ளது. எங்கள் குல மூதாதையர் மகிழும் கணம். எங்கள் குலக்கொழுந்துகள் உங்கள் சொல் கொண்டு வாழ்த்தப்படட்டும்!’ புன்னகைத்து அவனும் ‘ஆம் அவ்வாறே ஆகுக!’ என்றான்./
அவனை இன்று தரிசனம் செய்ததால் நாமும் புண்ணியம் கோடி செய்தவர்கள்  தினேஷ்குமார்