Tuesday, April 25, 2017

முதற்கனல்

 

 
மதிப்பிற்குரிய ஜெ.

வணக்கம்.. எனக்கு நீங்கள் 4 மாதங்களாய் தான் அறிமுகம். குறளினிது உரை யூ டியூபில் காணக் கிடைத்தது தற்செயல்.. ஒரு எழுத்தாளரை, உரையாளராய் உள்வாங்கினேன்..அத்தனை நேர்த்தி.இது நாள் வரை சேர்த்து வைத்திருந்த திருக்குறள் பற்றிய விஷயங்களை எல்லாம், அள்ளித்தூக்கி எறிந்து விட தோன்றியது.. எத்தனை விஷயங்கள்..அதை நீங்கள் மிக அழகான சால்வையென நெய்திருந்தீர்கள். யானையின் சிறு குறும்பைப் பற்றி விவரிக்கும் போது சிறுவனென இருந்தீர்கள்.அறம் உரைக்கும் போது ஆசானாய்!!

இத்தனை தாமதமாய் எழுதுவது மனத்தயக்கத்தை களைய எடுத்துக் கொண்ட நேரம்!!.. அதைப்பார்த்த நாளில் இருந்து தினசரி உங்கள் பதிவுகளை கவனிக்கிறேன்..வெண்முரசு  முதற்கனல் முடித்து விட்டேன்..அம்பையின் அலைச்சலை என் கண்ணீரின் வழி தரிசித்தேன்... பல்லாண்டுகள் கழித்து, வாசிப்பில் மனம் உடைந்து அழுதது அப்பொழுது தான்.. அதற்கு மேல் விவரித்துச் சொல்லத் தெரியவில்லை..

இன்று இது எழுதக் காரணம்,முதற்கனல் இன்று முடித்தேன்.. இன்னும் தொடருவேன். ஒரு படைப்பாளியின் படைப்புத் திறனை ரசிக்கையில், அவரிடம் அதைச் சொல்லாமல் விடுவது மிகப்பெரும் பிழை என்று தோன்றியது...

வணக்கங்கள்...

பவித்ரா..