தற்செயல்களுடன்
மானுடன் விளையாடலாகாது. தற்செயலென்னும் வடிவில் எழுந்தருள்வதே தெய்வம்.//
//கையருகே பேருருவம் கொண்டு நின்றிருக்கும் ஒன்றைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல//
//“தன்னைக் கடந்து சூதாடுபவனை நாற்களம் தன்னில் ஒரு காய் என அமர்த்திவிடுகிறது. அவன் ஆடுவதில்லை, ஆடப்படுகிறான்//
//சூதுக்களத்தில் எதுவும் திசைகளுக்கு அப்பாலிருந்து வருவதில்லை. கைவிரல்களென வந்தமைவது ஆடுபவனின் ஆழமே. அனைத்தும் அங்கிருந்தே எழுகின்றன//
இந்த வரிகளிலெல்லாம் அற்புதமான செய்திகளை கருத்துக்களை சாதாரணமாக சொல்லுவது போல ஜெ சொல்லிச் செல்கிறார்.
பாஞ்சாலி இருக்கும் அந்த சோலையின் மாலைக்காட்சிகளின் வர்ணனையில் கண் முன்னே ஒரு சித்திரம் அபப்டியே வரையப்பட்டு உயிர்பெற்றெழுந்தது. மிகத் தாழ்வாக வந்து வளைந்து மேலேறிய சிறிய குருவியை அண்மையிலென காணவே முடிந்ததென்னால்.
//முற்றிலும் சீரானவர்கள் பிழையின்றி இரண்டாகப் பிரிந்தவர்கள்.// இந்த வரிகள் திரெளபதிக்கானது, அவள் சக்கரவர்த்தினியாகவும் சேடிப்பெண்ணாயும் பிழையின்றி அதே நிமிர்வுடன் இருகிறாள்
சாலினியுடன் பாஞ்சாலி தீவிரமாக பேசிக்கொண்டிருக்கையில் எதிர்பாராமல் இடையில் வரும் கொடிமுல்லைச்செடி ஒரு கணத்தில் அந்த காட்சியின் தீவிரத்தில் ஒரு அழகை கொண்டுவந்து இணைத்து விட்டது
// ஒருபோதும் அறியமுடியாத ஊர்தி உடல் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருந்துகொண்டிருக்கும் அதை அறிவது அதை நாம் கட்டுப்படுத்த முயன்று தோற்கும்போது மட்டுமே.// இது சொல்லும் சேதி எத்தனை ஆழமானது?
இன்றைய அத்தியாயத்தில் மீள மீள வாசித்தறிந்து கொள்ள நிறைய இருக்கின்றது
//கலங்களும் இரவுறங்கவேண்டும்// இது நினத்துப்பார்க்காத ஒரு கோணம்.
அடுமனை
சுத்தமாக இருக்கவேண்டியது என்று அறிந்திருக்கிறேன் வாசித்துமிருக்கிறேன்
எனினும் இது மிகபபுதியது .
சுவையறிந்து உண்ணலாகாதென்ற நெறிகொண்ட திகம்பரருக்கு , சுவையை உருவாக்கியாகவேண்டும் என்னும் நெறிகொண்டவன் உணவளிப்பது அழகு\\
லோகமாதேவி