அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
மாமலரில் ஜயத்ரதனை பீமன் தண்டிக்கும் போது தோன்றும் கொடூரம், இங்கு ஜீமுதனை அவன் கொல்லும் போது தோன்றவில்லை. கொடும் தண்டனையாக அல்லாமல் பரிசாக மரணத்தைப் பெற்றுக்கொள்கிறான் ஜீமுதன். பீமன் கையால் மரணம் என்பதை ஓர் உயர் கௌரவமாக கருதும் அவனுக்கு அருட்கொடை போன்றே அதை வழங்குகிறான் பீமன். இக்கணம் காக்கும் தெய்வம் எனக் காணும் ஒருவரை அடுத்த கணம் நன்றி மறந்து காழ்ப்பு கொள்ள - மனம் இப்படித்தானோ என்று எண்ண அச்சம் உண்டாகிறது. இங்கே பீமன் கருணை உடையவன், எதையும் பெறும் நோக்கம் இல்லாத விருப்பு-வெறுப்பு அற்று கடமை புரிவோன். "வெற்றி என்பதுதான் என்ன?" என்று பீமன் சொல்வது அவன் ஜீமுதன் வென்றதைக் கருதுவதாக உள்ளது, தான் விளைந்ததயே பெற்ற வெற்றியாளன் அவன்.
விக்ரம்,
கோவை