அன்புள்ள ஜெ
பீமனுக்கும் குரங்குகளுக்குமான
உறவு தொடக்கம் முதலே விரிந்து வருவதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். முதலில்
நீங்கள் அவன் குரங்குமுலை குடித்து வளர்ந்தான் என்றெல்லம் எழுதும்போது கிளாஸிக்குகளுக்கு
உண்டான குழந்தைக்கதை என்றே நினைத்தேன். மெல்லமெல்ல அது விரிந்து இன்று காற்றை அறிந்தவன்
என்னும் இடம் வரை வந்துள்ளது. அவனுக்கும் அனுமனுக்குமான உறவு வரும்போதுதான் இந்த நாவலில்
ஆரம்பம் முதலே வந்துகொண்டிருக்கும் குரங்குகளைப்பற்றிய ஒரு பெரிய சித்திரம் வந்தது.
எவ்வளவு குரங்குகள். தூளிகன் சூர்ணன் போன்ற குரங்குகளை மறக்கவே முடியாது
ஜெயராமன்