ஜெ
கிருஷ்ணனுக்கு
குசேலர் ஏன் அவல் கொண்டுசென்றார் என்று நான் சின்னவயசிலேயே கேட்டது ஞாபகம் இருக்கிறது.
ஆனால் அது மிக ஏழைகள் சாப்பிடும் உணவு என்று சொன்னார்கள். ஏழைகள் அவலா சாப்பிடுவார்கள்
என்று எனக்குச் சந்தேகம். இப்போது வெண்முரசில் அதுதான் குருகுலங்களின் ரெடிமேட் உணவு
என்று தெரிந்ததும் ஆச்சரியமாக இருந்தது. அவல உணவு அல்லது சாதாரண உணவு என்ற பெயரிலிருந்துதான்
அந்த வார்த்தையே வந்துவிட்டது. நாம் எந்த அளவுக்குப் பழையவிஷயங்களை அறியாமலிருக்கிறோம்
என்ற பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது
செல்வக்குமார்