Thursday, May 10, 2018

கதைகள்



ஜெ,

ஒவ்வொரு துணைக்கதையும் ஒவ்வொரு வகையில் பேசப்படும் பொருளுடன் இணைந்து அர்த்தம் அளிக்கின்றன. திரௌபதிக்கு அழகியல் பேசப்படும்போது கீரைத் துளியை விருந்தாக ஆக்கும் கதை வருகிறது. அதுவே அழகு. வேத வேள்வியைப்பற்றிய கேள்வியுடன் குசேலனின் கதை வருகிறது. அவன் பரம்பொருளுக்கு கொடுக்க மட்டுமே அறிந்தவன். தன் கைப்பிடி அவலை கொடுக்கிறான். வேள்வி என்பதே அதுதானே?

அதேபோல உதங்கரின் வேதாந்தவிவாதம் வரும்போது கலங்கியநீரை மறுத்து தெளிநீரைத் தேடும் கதை வருகிறது. ஞானமென்பதே தெளிவுதேடுவது. அந்த விழைவில் அமுதமே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். எஞ்சுவது போதையேற்றும் சோமம் மட்டும்தான். நுட்பமான கதைகள் வழியாக கீதையினுள் செல்லவைக்கிறது இமைக்கணம்

சாரங்கன்