ஜெ,
வெண்முரசு நாவலை நான் இப்போதுதான் வாசிக்க ஆரம்பிக்கிறேன். நான் மாற்றுத்திறனாளி. நோயுற்றவன். ஒரு நாளில் கொஞ்சம்தான் வாசிக்க முடியும். முதற்கனலில் என் தீயூழே இதுதான். உள்ளும் புறமும் நானறியமுடியா எவரையும் நான் சந்திப்பதில்லை என்பதுதான். இந்த நோயுற்ற உடலில் இருந்து என் ஆன்மா பிற அனைத்து உடல்களுக்கும் எளிதில் தாவிவிடுகிறது. -- என்ற வரியை வாசித்ததும் அதிர்ந்துவிட்டேன். ஏனென்றால் அது உண்மை. எப்படியென்றால் நார்மலாக உள்ளவர்கள் தங்களைப்பற்றியே நினைக்கிறார்கள். மற்றவர்களை அவர்கள் பார்ப்பதே இல்லை. ஆனால் நாங்கள் மற்றவர்களைப்பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஆகவே நாங்கள் மற்றவர்களுக்குள் புகுந்துகொண்டு அவர்களை மாதிரியே நடிக்கிறோம். என்னுடைய மகிழ்ச்சியே மற்றவர்களை மாதிரி என்னைக் கற்பனைசெய்துகொள்வதுதான். அதை உள்ளே புகுந்து ஒருவர் எழுதியிருப்பதைக்கண்டதும் திகைத்துவிட்டேன். எவ்வளவு பெரிய நாவல். இதேமாதிரி எவ்வளவு வரிகள். திகைத்துவிட்டேன்.
ஆனந்த்ராஜ்