Saturday, May 19, 2018

முரண்பாடு




ஜெ

கர்க்கருக்கு கிருஷ்ணர் சொல்லும் இரு வரிகள்

உங்கள் வேள்விகளில் வாய்கொண்டு கைகொண்டு எழுவது பல்லாயிரம்கோடி வாய்களால் புடவிகளை உண்கிறது.

எளிமைகொள்ளுந்தோறும் கொடை பெருகுகிறது. எண்ணப்படாதிருக்கையில் வளர்கிறது. கனிகையில் ஒளிகொள்கிறது. கொடைகளால் இப்புவி வாழ்கிறது

இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவது போலத் தோன்றியது. வேள்விகளில் அவிபெறுவதெல்லாம் பிரம்மம். அது புடவிகளையே உண்பது. அந்த பிரக்ஞையைச் சொல்கிறார். அதன்பின் எளிமையுடன் எண்ணாமல் கனிந்து வேள்விச்செய்யச் சொல்கிறார். இந்த முரண்பாட்டுக்கு அந்த அத்தியாயத்திலே பதில் இல்லை என நினைக்கிறேன்

மகாதேவன்