Wednesday, May 23, 2018

மாற்றங்கள்




ஜெ

வெண்முரசின் பல பகுதிகளை இப்போது இந்த இடைவெளியில் தொகுத்துக்கொள்கிறேன். கதை பன்னிரு படைக்களத்துடன் முடிந்தது. இனிமேல்தன் ஆரம்பமாகிறது. நடுவே பல கதைகள் அல துணைவழிகளாகச் சென்றன. வனவாசத்தை பாண்டவர்களின் குணாதிசயத்தில் என்ன மாற்றம் வந்தது என்று பார்க்கிறேன். அர்ஜுனன் தத்துவார்த்தமானவனாக ஆகிவிடுகிறான் . கீதையை கேட்கிறான். யுதிஷ்டிரர் மேலும் கருணை கொண்டவராகவும் பற்றற்றவராகவும் ஆகிறார். அவரை மற்றவர்கள் பார்க்கும் பார்வை மாறவில்லை. அவரை அவர்கள் கொஞ்சம் கோழையாகவே பார்க்கிறார்கள். ஆனால் அவர் ஐந்து வீடு போதும் என்ற அளவுக்கு வந்ததே அந்த வனவாசத்தால்தான். அவருடைய மனம் விலகிவிட்டது. அதேபோல திரௌபதியும் முழுமையாக மாறிவிட்டாள். பீமன் மாறிவிட்டான். ஆனால் இன்னும் அன்பும் வெறியும் கொண்டவனாக ஆகிவிட்டான். ஏனென்றால் எனக்கு ஞானம் வேண்டாம் அன்பும் காதலும் போதும் என்றுதான் அவன் திரும்பிவந்தான் . ஆகவே அவன் கொடூரமானவனாக ஆகிக்கொண்டிருக்கிறான்

செல்வக்குமார்