Saturday, May 26, 2018

ஒளிந்திருப்பது


இவ்வளவு நீட்டித்தொட்டால் தட்டுப்படுவது மெய் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது. அது அறிவின் ஆணவம் மட்டுமே. அரிதென்று இருப்பதனால், மறைந்திருப்பதனால் ஒன்று மெய்யென்றாக வேண்டியதில்லை


இமைக்கணத்தை மீண்டும் வாசிக்கையில் இந்த வரியில் நின்றுவிட்டேன். இதையே நினைத்துக்கொண்டிருந்தேன். நம்முடைய நடுவயதில் மண்டையில் வந்து அறைகிறது இந்த வரி. ஒளிந்திருப்பதுதான் உண்மையாக இருக்கமுடியும் என நம்புவதுதான் மிகப்பெரிய மாயை. இதை அறிய நூறு ஜே கிருஷ்ணமூர்த்தியைத் தாண்டி வரவேண்டியிருக்கிறது

ஆனந்த்