Saturday, July 12, 2014

வண்ணக்கடல்- சித்திரங்கள் - முரளி

அன்புள்ள ஜெ 

ஓவியம் பற்றி - 

வானத்தை விழுங்கி வெளிகாட்டும் கிணறு - எச்செர் ஓவியம் போல 


வானம், பூமி அதன் ஆழத்தை இணைக்கும் காலக் கயிறாக.. அற்புதம்!!!

உங்களது பல வரிகள் - உபநிஷத்தினை உள்வாங்கி மிளிர்கிறது.
தைத்ரீய உபநிஷத் - 
சீக்ஷாம் வ்யாக்க்யாஸ்யமா: வர்ண: ஸ்வர:... எனத் தொடங்கி..
...
அதாதி வித்யம் | ஆசார்ய: பூர்வ ரூபம் | அந்தேவாஸ் உத்தர ரூபம் |
வித்யா ஸந்த்தி : ப்ரவஜனக்ம் ஸந்த்தானம் -- 

என ஆசிரியன் - மாணவன் பற்றி சொல்கிறது - அதன் உட்பொருள் 
என பலவகை மடிப்பாக - மீண்டும் மீண்டும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக 

பீமசேனன் - அன்னம் மூலமாக - பிரம்ம ஞானத்தை தொடுவதும் - ஆழ்ந்த புரிதலாக விரிய - எப்படி சமையலின் மூலம் - புடவிப் புள்ளியை (singularity point) தொடலாம் என்கிற சாத்தியம் - தவிர பீமன் மனிதர்களுடன் மிகுந்த பேராவலுடன் தொடர்பு கொள்வதை எதிர் பார்த்து நடப்பது  நெகிழ்ச்சி தரும் நிகழ்வு 

அனைத்து கதை மாந்தர்களும் தன்னால் இயன்றதை - அனைத்து தளங்களிலும் - முயற்சி செய்து - வெளிப் படுத்துவது அனைத்தும் 
படித்து மெய் சிலிர்க்கும் அனுபவமாக திகழ்கிறது.

குந்தி, துரியோதனன், பீமன், அர்ஜுனன், துரோணர் - ஆழ்கடல் அதிசயங்களாக - வாசித்தலில் ஒரு scuba diving ஆக - மூலம் விரியும் காட்சிகள் 


ஆயிரம் வார்த்தைகள் ஒரு படத்தில் அடக்கம் - என்கிற பரப்பியல் (popular)  வாசகத்தின் தலைகீழாக - ஒரு வாசகம் சில படங்களில் தீராதென விதைகளாக கிடக்கும். வாசக நிலங்கள் தோறும் வனங்களாக விளையும்.

வெறும் புகழ்ச்சி போல தோன்றாலாம். அது எண்ணமல்ல. 

பல வருடங்களுக்கு மிகச் சிறந்த ஆக்கமாக (உலகிலேயே) கிடக்கப் போகும் பெரும் முயற்சியாக - பல விளை மனங்களை நிலமாகக் கொள்ளும் உங்கள் வெண்முரசு  என்றென்றும் நலத்துடன்  திகழ்க !

மனம் நெகிழ்ந்த அன்புடன் 
முரளி