Monday, July 21, 2014

கலிங்கம்

அன்புள்ள ஜெ

வெண்முரசில் வரும் கலிங்க வர்ணனையை வாசித்துக்கொண்டிருந்தேன் நான் ஒரிசாவில் நெடுநாட்கள் இருந்திருக்கிறேன். ஒரிசாவின் நுட்பமான சித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. அங்குள்ள மக்களின் தோற்றம், பழங்குடிகளின் அணிகலன்கள் எல்லாமே மிகச்சரியாக உள்ளன.

என்னுடைய சந்தேகங்கள் இரண்டு.

1 சிலிகா ஏரியைப்பற்றிய கதை மகாபாரதத்தில் உள்ளதா

2 சூரியக்ஷேத்ரமான கொனார்க் மகாபாரதகாலத்திலெயே இருந்ததா?

பிரேம்குமார்

அன்புள்ள பிரேம்

பலமுறை ஒரிசாவில் பயணம்செய்த அனுபவம். சிலிகாவில் சென்றது அப்படியே உள்ளது

சிலிகா பற்றிய கதை ஒரியாவின் மகாபாரதத்தில் இருக்கிறது

அர்க்கபுரி என்ற நகரைப்பற்றி புராணங்கள் சொல்கின்றன. இந்நகரம் கலிங்கத்தில் இருந்தது. அது கொனார்க்காக தான் இருக்கவேண்டும். அது சோதிடத்தின்படி சூரியனின் முதற்கதி ர் படும் டிஅம்

ஆனால் அன்றைய அர்க்கபுரி கடலுக்குள் ஏழெட்டு கிலோமீட்டர் உள்ளே இருந்திருக்கும். இப்போதிருக்கும் சூரியனார் ஆலயம் பிற்காலத்தையது

ஜெ