Monday, July 7, 2014

கனமாகும் கணங்கள் முதற்கன- ராமராஜன் மாணிக்கவேல்

ஓம் ஸ்ரீமுருகன் துணை

அன்புள்ள திரு.ஜெயமோகன் வணக்கம். இன்று, அம்பையின் வாழ்வில், கனமாகும் கணங்கள்.

முதற்கனல்-11ல் சுயம்வர மண்டபத்தில் அம்பையை அறிமுகம் செய்யும்போதே. பரதவர்ஷத்தின் பெரும் சக்கரவர்த்தினியான அஸ்தினாபுரியின் தேவயானிக்கு நிகரானவர் என்று அறிமுகம் செய்தீர்கள். எந்த அஸ்தினாபுரிக்கு சுயம்வர அழைப்பு மறுக்கப்பட்டதோ அந்த அஸ்தினாபுரியின் நினைவுகளால் அவள் அறிமுகப்படுத்தப்படுவது உள்ளிடைப்பொருள் கொண்டது.
தேவயானி என்பவள் தேவகுருவின் மகன் கசனைக்காதலித்து ஏமாந்து யயாதியை மணம் முடித்து, சர்மிஷ்டையை நோகடித்தவள். தேவயானியால் யயாதி அடைந்ததைவிட இழந்தது அதிகம். அம்மையும் அப்படிப்பட்டவள்தான் சால்வனைக்காதலித்து ஏமாந்து பீஷ்மனின் இழப்புக்கு கரணமாக இருக்க போகிறாள். யயாதியின் உடலில் ஒரு விஷமாய் பரவிய தேவயானிப்போல பீஷ்மனின் உடலுக்கு ஒரு விஷமாய் வளரப்போகிறாள். நன்றி. நிற்க..

“இளவரசிக்கு இருபது வயது நிறைவடைகிறதுஆறு மதங்களையும் ஆறுதரிசனங்களையும் மூன்று தத்துவங்களையும் குருமுகமாகக் கற்றவர்.கலைஞானமும் காவியஞானமும் கொண்டவர்சொல்லுக்கு நிகராக வில்லையும்வாளையும் கையாளப்பயின்றவர்யானைகளையும் குதிரைகளையும்ஆளத்தெரிந்தவர்” இப்பேர் பட்டவள் அம்பை, தேவயானியை விடவும், ஏன் அந்த காலத்தில் பாரதவர்த்தின் எந்த ஷத்திரிய பெண்ணும் அவளுக்கு நிகராக இருந்து இருப்பாளா என்று எழும் வினா? எழுந்த இடத்திலேயே அமிழுந்து கரைந்து காணமல் போய்விடக்கூடியது. இல்லை.. என்ற ஒற்றைப்பதில்தான்.

உடலால் உள்ளத்தால் ஞானத்தால் விளைந்து நிற்கும் ஒரு பெண், தன் வாழ்வின் சரியான ஒரு சிக்கலில் நிற்கும் நேரத்தில், தன் வாழ்வு பரிபோகும் அந்த கனத்தில் ஏன் ஒற்றைச்சொல்லைக்கூட உதிர்க்கவில்லை.
ஆண் பேசும் தருணங்கள் எளிதாக நிகழ்வதில்லை. அவன் கைகள் பேசினாலும் பேசுமே அன்றி, வாய் அவ்வளவு எளிதில் பேசாது. அப்படி பேசினாலும் அது பொருள் அற்ற, திரன் அற்ற வசையாகத்தான் இருக்கும். ஆண் வாய்பேசும் வார்த்தைகள் இரண்டாவது முறைபேசும் வார்த்தைகள்தான். அவன் மனம் பேசியப்பின்தான் அவன் வாய்பேசுகிறது. அதனால்தான் அவனுக்கு யுத்தம் வரும் அளவுக்கு பேச்சு வருவதில்லை. ஆனால்..பெண்!

பெண் எந்த ஒரு சிக்கலான நேரத்திலும்! எவ்வளவு கண்ணீரிலும் பேசும் சக்திப்படைத்தவளாக இருக்கிறாள். சொல்லப்போனால் பொருள் பொதிந்த வார்த்தைகளையும், திசைகள் தோறும் எழும் மொத்த நாக்கையும் கட்டிபோடும் சொல் சொல்கிறாள். முறிமருந்து இல்லாத தனி விஷம்கொண்ட விஷ சொற்கைளை உதிக்கிறாள். அவள் சொல்லிய பின்புதான் அவள் மனமே அந்த சொற்களை அறிகின்றது.

அம்பைக்கூட இந்த முதற்கனல்-12ல், என் வழி நெருப்பு வழி என்று முதுநாகினி சொன்னதையும், என் சொற்கள் குன்றாக விஷம் கொண்டவை என்றும் குறிப்பிடுகின்றாள். அவள் கற்ற பெற்ற ஞானம், கலை எல்லாம் வெறும் உயிர் அற்றவைகளா? இத்தனைக் கற்றதாலேயே அவள் தன் பெண்மையை இழந்து, சால்வனின் உடைவாளை எடுத்து, பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் ஆண்போல சண்டை இட்டாலா? தரையில் எறிந்த அந்த மாலையை சால்வனின் கழுத்தில் இட அவளால் முடிந்திருக்குமே? உடைவாள் உருவ நேரம் இருந்தபோது.
“நிறுத்துங்கள்” அல்லது ”கேளுங்கள்” என்று ஒற்றைச் சொல் அங்கு அவள் எழுப்பி இருந்தால் நன்றாக இருந்து இருகும் அவள் கற்ற ஞானத்திற்கு ஒரு பொருள் கிடைத்திருக்கும்.
 பீஷ்மரிடம் கெஞ்சவோ, யாசிக்கவோ விரும்பாத அம்பை நான் விரும்புவதுஉங்களுடனான உரையாடலை மட்டுமே” என்கிறாள். இந்த வரிகளை அவள் சுயம்வர மண்டபத்தில்எழுப்பிஇருந்தால் பீதமகன் பீஷ்மன் ஒரு கணம் நின்று இருப்பான். எதைக்கற்றும் எத்தனை ஞானம் இருந்தும் அவள் கையில் எடுத்த வாள் இனி அவள் கையை கண்ணுக்கு தெரியாமல் தொடர்ந்துக் கொண்டே இருக்கப்போகின்றது.

வாழ்வின் சிக்கலான தருணங்களில் மனித இனத்திற்கு கிடைக்கும் கணத்தில் மனத இனம் கண்டு அடையும் “சொல்லா? வில்லா?” என்பதை பொருத்து அதன் வாழ்வின்கனம் அமையபோகின்றது என்பதை காட்டும் இடம் இன்று.
பசுவை வேட்டையாடுவது சிங்கத்தின் தன்அறம் என்றாலும், சிந்தையும், சிந்தைவழி வரும் அறிவும், அறிவு மலர்ந்து பெரும் ஞானமும் மனித இனத்திற்கு சாட்சியாக நின்று சவால் விடுகிறது. “மனித சிங்கமே! நீ வேட்டையாடும் இரையை நீ தின்றுவிடலாம், அந்த அழியும் இரை உனது இதயத்தை வேட்டையாடுவதை உன்னால் தடுக்கவே முடியாது” என்று.

ஒவ்வொரு இரையின் மரண ஓலத்திற்கு பின்னால், மனிதன் வாழ்வின் கண்ணியில் உள்ள ஒன்றை திரும்பிப் பார்க்க வைக்கிறது. இரையாகிவிட்ட அம்பையின் ஓலம் இங்கு இனி ”அம்பை குனிந்து சுழித்து மேலெழும் கங்கையின்நீரைக் கையில் அள்ளிக்கொண்டு உரக்கச் சொன்னாள். “கங்கை மீது ஆணையாகச்சொல்கிறேன்….நான் சால்வனின் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுப்பேன்வேறுஎக்குழந்தை என் வயிற்றில் பிறந்தாலும் இந்த கங்கை நீரில் அவற்றை மூழ்கடிப்பேன்.”

பீஷ்மன் அங்குதான் உட்கார்ந்தான் ஆனால் அவன்..உருண்டு..உருண்டு..அஸ்தினாபுதியில் படியில் உருண்டு..சந்தனு மடியில் விழுந்து..கங்கையில் காலில் விழுந்து ..தொடவே முடியாத கங்கையின் அடி ஆழத்திற்கு போய் கொண்டேதான் இருப்பான் யார் அவனை இனிக்காப்பது.

அரண்மனைக்குச் செல் குழந்தைஇது உனக்குரிய போரல்லஇந்த ஒப்பற்ற வரிக்குள் இருக்கிறார் சாகவரம்பெற்ற பீஷ்மர். அழியா புகழ்கொண்ட அவரின் கருணைகொண்ட வீரம். தேவவிரதனின் முகத்தில் அஸ்தினபுரியின் மக்கள் தங்கள் கனவில் கண்ட பிதாமகர்கள் அத்தனைப் பேருக்கும் அவன் முகமே இருந்தது என்னும் சொற்கள் உயிர்பெரும் வரம் இன்று.  
சால்வனேஉன் வீரத்தை நிறுவிவிட்டாய்இதோ மூன்றுநாழிகையாக நீ என்னுடன்போரிட்டிருக்கிறாய்உனக்கு வெற்றியும் புகழும் நீண்ட ஆயுளும் அமையட்டும்உன்குடிகள் நலம்வாழட்டும்” என வாழ்த்தினார். ஆகா.. வீரம் வீரமாகுவது ரத்தம் குடித்து அல்ல, தாயின் முனைக்குடித்தப் பாலின் சுவையை மற்றவன் எதிர்த்தவன் சிரிசில் முர்ந்துப் பார்ப்பது. பீஷ்மன் அழியா அறவீரம் வாழ்க!
“அதாவது சூதர்பாடல்களுக்காக வாழ முனையும் எளிய ஷத்ரியன்”-சூரியனே, தன்னை மறைத்துக்கொண்டு நட்சத்திரங்களை, நட்சத்தரங்களாக வாழவிடுகின்றன.  

நன்றி
வாழ்க வளமுடன்
அன்புள்ள
ஆர்.மாணிக்கவேல்