Monday, July 7, 2014

மழைப்பாடல் மழை-பாலா

”நூற்றியிருபதாண்டுகளுக்கொருமுறை ஆரியவர்த்தத்தில் பஞ்சம் வரும் என்பது நிமித்திகர் கணக்கு. ஆறாண்டுகளுக்கொருமுறை கோடை எல்லைமீறும். ஆறின் மடங்குகளில் அது பெருகிச்செல்லும் என்பார்கள். ஆறாண்டுகளுக்கு முன்பு கோடை வளர்ந்து நீண்டு சென்று பெருமழையில் முடிந்ததையும் புராணகங்கை பெருகிவந்து நகரை மூழ்கடித்ததையும் விதுரன் எண்ணிக்கொண்டான்.
“மீண்டும் அந்தப் பெருமழையும் வெள்ளமும் வரக்கூடுமா?” என்று கேட்டான். வைதிகர் சிரித்து “பிந்திய மழை சேர்ந்துபெய்யும் என்பது கணக்கு. ஆனால் அந்த மழை இங்குதான் பெய்யவேண்டுமென்பதில்லை. எப்போதும் இப்பக்கமாக வரும் மழை முன்பொருமுறை ஆறாண்டுக்கோடையில் கூர்ஜரத்தைத் தாண்டி வடமேற்காகச்சென்று வடகாந்தாரத்தையும் பால்ஹிகநாட்டையும் முழுக்காட்டியது. பாலைவனமே மழையால் அழிந்தது என்றார்கள்” என்றார். மெல்ல தனக்குத்தானே சிரித்தபடி “பாவம் ஒட்டகங்கள். அவற்றுக்கு சளி பிடித்திருக்கும்” என்றார். மூப்பு காரணமாக எதையுமே எளியவேடிக்கையாக எடுத்துக்கொண்டு தனக்குள்ளேயே மகிழ்ந்துகொண்டிருப்பவர் அவர் என்று விதுரன் எண்ணினான்.”வெண்முரசில் வரும் வரிகள்
பசிபிக் பெருங்கடலில் நடக்கும் ஒரு நிகழ்வை நினைவுக்குக் கொண்டு வந்தது. அது 4-5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது.
தென்னமரிக்கக் கடலில், தென் துருவத்தில் இருந்து வடக்காக வரும் ஒரு பெரும் குளிர் நீர்த் தாரை உண்டு. அது தென் துருவத்தில் இருந்து, ‘நைட்ரேட்” நுன் கனிமத்தைப் பெருமளவில் கொண்டு வருகிறது. இது உயிருக்குத் தேவையான முக்கியமான கனிமம். இதை உண்டு, “planktons’ என்னும் நுண்ணுயிரிகள் பெருகுகின்றன. இவற்றை உண்டு மீன்கள் வளர்கின்றன. மீன்களை உண்டு, கடற் பறவைகள் வளர்கின்றன. மீன் பிடித்தலும், கடற்பறவை எச்ச உரமும், தென்னமரிக்க நாடுகளான பெரு, ஈக்வடார் போன்ற நாடுகளின் பெரும் தொழில்கள்.
ஆனால். 4-5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்தக் குளிர் நீர்த்தாரை வரும் திசை, அதன் எதிர்ப் புறத்தில் இருந்து வரும், வெப்ப நீர்த் தாரையால் மறிக்கப் பட்டு திசை மாறுகிறது. வெப்ப நீர்த்தாரை, கடலுக்கு மேலுள்ள காற்றின் திசையையும் மாற்றுகிறது. விளைவாக, பெரு, மற்றும் ஈக்வடார் நாடுகளின் கடற்கரையோரங்களில், வழக்கத்துக்கு மாறாக, டிசம்பர் மாதத்தில் மழை பொழிகிறது. பூக்கள் மலர்கின்றன. இந்த டிசம்பர்க் கொண்டாட்டத்தை, மக்கள் தேவ குமாரனின் வரவென வரவேற்று, “El nino” என்று ஸ்பானிஷ் மொழியில் அழைத்தனர். El nino என்றால், “the boy” என அர்த்தம்.
ஆனால், எதிர்த்திசையில் வரும் வெப்ப நீர்த் தாரை கொண்டு வரும் மழை ஒரு ஏமாற்று தான். இதனால். குளிர்த் தாரை மறிக்கப் பட்டு, நைட்ரேட் வரவு நின்று போய், மீன் குறைந்து, பறவைகள் குறைந்து, தென்னம்ரிக்க நாடுகளின் மீன் பிடிப்பு மற்றும் உரத் தொழில்கள் பெருமளவில் பாதிக்கப் படுகின்றன. எனவே உண்மையிலே 4-5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது தேவகுமாரனல்ல; சாத்தான் என்று நிரூபண வாத அறிவியில், தொடர்புச் சான்றுகள் கொண்டு சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த El nino , மலேசிய / இந்தோனேசியா நாடுகளில், காடுகளில் பெரும் நெருப்பை உண்டாக்குகிறது. அதில் கிளம்பும் வெப்பமும், புகையும், பாமாயில் மரங்களை பாதிக்கிறது. பாமாயில் உற்பத்தி குறைந்து, விலை அதிகமாகிறது. எனது தொழிலில், எண்ணெய் மிக முக்கியமான கச்சாப் பொருள் – எனவே நான் சார்ந்திருக்கும் தொழிலின் லாபத்தையும் பாதிக்கிறது.
இந்த El nino, பாரதத்தின் மீது பொழியும் மழை முறையையும், அளவையும், காலத்தையும் பாதித்து, நீண்ட கோடையையும், காலம் தவறிப் பெய்யும் மழைக் காலத்தையும் உருவாக்குகிறது என்கிறார்கள். பருவ மழையை ஒரு 20 ஆண்டுகள் அவதானித்ததில், இது ஓரளவு உண்மை என்றே தோன்றுகிறது. இவ்வாண்டும் el nino ஆண்டு என்கிறார்கள். கடுமையாக இருந்து.

பாலா