Sunday, August 17, 2014

ஏகலைவனின் வில்

மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். சில விஷயங்கள்.

1) இன்றைய வெண்முரசில் (வண்ணக்கடல் – 61) கட்டை விரல் இல்லாமல் வில்வித்தை பழகுவது பற்றி படித்ததும், ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. சந்தால் பழங்குடியினர் இன்றும் கட்டை விரல் உபயோகிக்காமல் வில்வித்தை பழகுகிறார்கள்.
http://www.outlookindia.com/news/article/Rupantor-speaks-about-the-unknown-part-of-Mahabharat-Sayeed/640497

2) உங்களுடைய சிங்கப்பூர் நேர்காணல் (youtube) காணொளிகளை, http://venmurasudiscussions.blogspot.in/ தளத்தில் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். தாங்கள் அதில் வெண்முரசு மற்றும் அதன் அமைப்பு குறித்து பல விஷயங்கள் சொல்லி இருந்தீர்கள்.

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.

அன்புள்ள ராஜாராம்

சிங்கப்பூர் காணொளிகள் ஏற்கனவே இணையத்தில் வந்துவிட்டன என்று நினைக்கிறேன் பார்க்கிறேன்

சந்தால் பழங்குடியினர் [பஸ்தர் பகுதி] தங்களை ஏகலைவ குலம் என்றே நினைக்கிறார்கள். அவர்களின் அரசியல் அமைப்பு ஒன்றுக்கே ஏகலைவ சேனா என்று பெயர் உண்டு. அவர்கள் நான்கு விரல்களில் அம்பு விடுவதை நானே கண்டிருக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ.,

ஏகலைவன் கட்டை விரலைக் காணிக்கையாக்கும் நிகழ்வை எப்படி சொல்லப் போகிறீர்கள் என்று ஒரு சித்திரம் வைத்திருந்தேன்.. எந்தவித மறுசிந்தனையும் இல்லாமல் நிகழ்ந்த நிகழ்வை ஒரே வரியில் நீங்கள் தாண்டிச்சென்ற வேகம் அபாரம். "எடுத்தது கண்டனர் இட்டது கேட்டனர்" என்பதுபோல் இருந்தது.

இமயமலை பயணம் குறித்து... புஷ்பவதி என்னையும் கனவில் ஆழ்த்தியிருந்தது. நீங்கள் அங்கே செல்லவில்லை என்றது கட்டுரை படிக்கவே மனம் வரவில்லை... Better luck next time (for you and us)

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

நானே அது எப்படி வரப்போகிறது என்பதை ஒரு பதைப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். எப்போதுமே சட்டென்று அமைந்துவிட்டால் சரியாகவே இருக்கும்.
ஜெ





<a href="http://www.venmurasudiscussions.blogspot.in/">வெண்முரசு விவாதங்கள் </a>