Friday, August 22, 2014

இரு கரு யானைகள்

நடக்கும் யானைகளை மூடிய நீலப்பட்டுக் கம்பளங்கள். 

இந்த வர்ணனை அன்று பிறந்த ஒரு கைக்குழந்தையின் விழிகள் தூக்கத்தில் உருளும்போது நீல இமைகள் மூடியிருப்பதைச் சொல்கிறது என எண்ணியபோது நம்பவே முடியவில்லை. யானைகள் போன்ற கருவிழிகள். அதுவும் கைக்குழந்தைக்கு. poetic utterance என்றுதான் சொல்லவேண்டும். அர்த்தமில்லாமல் இருக்கையிலேயே பெரிய கவிதை. ஆனால் கைக்குழந்தையின் கண்கள் இரு யானைகளா? என்னத்தைச் சொல்ல?

சுவாமி


அன்புள்ள சுவாமி,

அதை எழுதியபின்னர் நான் கவனித்தேன். நேற்று என் மகனுடன் அந்த வரி பற்றி பேசிக்கொண்டிருந்தேன். குழந்தைகளை மனிதர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். குழந்தைகள் அவர்களுக்குள் வளர்கின்றன. ஆகவேதான் பல படிமங்களில் குழந்தை பிரம்மாண்டமாக விரிந்துள்ளது என்றான். இருக்கலாம்

ஜெ