ஜெ
பாஞ்சாலி சுயம்வரத்தில் கர்ணன் அவையில் நுழையவே அனுமதிக்கப்படவில்லை என்றுதான் நான் வாசித்திருக்கிரேன். அவன் கீழ்க்குலம் என்று சொல்லி அவமதிக்கப்பட்டு வில்லேந்த அனுமதிக்கப்படவில்லை. அவன் வில்லேந்தியிருந்தால் ஜெயித்திருப்பான் என்கிறார்கள். அப்படி அவனை அவமதித்தது பாஞ்சாலிதான் என்று கதைகளில் வாசித்தேன். டிவி நிகழ்ச்சியில் கூட காட்டினார்கள். அதற்கு அவளுக்கு முன்பே அர்ஜுனனிடம் காதல் இருந்ததுதான் காரணம் என்ரார்கள்
ஆனால் நீங்கள் கர்னன் பாஞ்சாலியின் சுயம்வரத்தில் தோற்றுப்போனதாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதலாமா?
அருண்
அருண்,
மகாபாரதம் ஆதிபர்வம் சுயம்வர பர்வம் 202 ஆவது அத்தியாயத்தில் கர்ணன் வில்லேந்தி அம்பு தொடுத்து மயிரிழையில் தோற்றதாகவே வருகிறது
வேறு மகாபாரதங்களில் நீங்கள் சொல்வதுபோல இருக்கலாம். நான் அதை திரௌபதியின் ஆளுமையையும் கர்ணனின் அகத்தையும் காட்டுவதாக விரிவாக்கம் செய்தேன்
ஜெ