Thursday, January 15, 2015

தருமனின் எண்ணங்கள்




வெண்முரசில் கிட்டத்தட்ட எல்லா கதாப்பாத்திரங்களுக்குமே அவர்களின் அகத்தில் ஓடும் எண்ண ஓட்டங்கள் எழுதப்பட்டிருக்கும். வசனங்களை விட அவர்களின் எண்ணங்கள் தான் வெண்முரசில் அதிகம் பதியப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். பல காட்சிகளை சில கதாப்பாத்திரத்தின் பார்வையில் அவதானிப்பிலிருந்து கூறப்பட்டிருக்கும்.

ஆனால் தருமனின் எண்ண ஓட்டங்கள் எங்குமே எழுதபடவில்லை என்று நினைக்கிறேன். அவன் செயல்கள் வசங்கனங்கள் மூலமே நமக்கு தருமன் தெரிய வருகிறான். எனக்கு தெரிந்து அவன் அர்ஜுனனிடம் பேசும் சில இடங்களிலேயே அவன் அகத்தில் ஓடுவது தெரிய வருகிறது. குறிப்பாக துருபதனுடன் போருக்கு போகும் போது அர்ஜுனனிடம் தருமன் பேசும் காட்சி. 

ஒருவேளை இதை தேவைக்கென்றே செய்திருக்கலாம். தருமனை யாரும் புரிந்து கொள்வதில்லை. அவன் செயல்களையும், பேச்சுகளையும் பீமனும், அர்ஜுனனும் பதிவி மேல் அவன் கொண்ட ஆசை என்றே கொள்கிறார்கள். மீண்டும் மீண்டும் தருமன் என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை. நாம் தனித்திருக்கிறேன் என்கிறான். அவன் பிற கதாப்பாத்திரங்களின் கண்களுக்கு படுவது போலவே வாசகர்கள் கண்ணுக்கும் தெரியட்டும் என்று விடப்பட்டிருக்கலாம். 

பிரயாகை 74 வரை படித்துள்ளேன், இனி வரும் அத்தியாயங்களின் அவன் எண்ணங்கள் எழுதப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஏற்கனவே எழுதப்பட்ட அத்தியாயங்களிலும் எங்காவது எழுதப்பட்டிருந்தாலும் சுட்டிகாட்டும் படி கேட்டு கொள்கிறேன்.

சில கதாப்பாத்திரங்களின் அக ஓட்டங்கள் நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது அது அந்த கதாப்பாத்திரங்களை புரிந்து கொள்ள உதவுகிறது மேலும் அந்த கதாப்பாத்திரங்களுடன் நெருக்கமாக வாசகர்களை ஆக்கிவிடுகிறது. விதுரரின் எண்ணங்கள் தான் இருப்பதிலேயே அதிகமாக சொல்லப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். பிரயாகையில் பான்டவர்களில் அர்ஜுனனுடைய எண்ணங்கள் தான் அதிகமாக எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஹரீஷ்
குழுமவிவாதம்