Tuesday, January 6, 2015

பீஷ்மர்



அன்பின் ஜெ,

 நிலத்தடி நெருப்பு -2 அற்புதமாய் இருந்தது. பாண்டவர்கள் இறப்பதாக நினைப்பதும் , அவர்கள் நிகழ்த்திஇருந்த போரைப்பற்றியும் எத்தனைபேர் பார்வையில் இருந்து எத்தனை விதமான விளக்கங்கள். கிருஷ்ணர் பற்றிய பீஷ்மரின் பார்வை பிரமிப்பாக இருந்தது. விதுரர் ஆதங்கம் , துரோணர் ஆசை மற்றும் பெருமிதம் , விதுரர் என்ன செய்துஇருக்க வேண்டும் என்ற பீஷ்மரின் கருத்து அழகாக வெளிப்பட்டது.

நேற்றைய பகுதியில் திருத்துரஷ்டிரின் சோகம் வெளிப்பட்டத்தை போல வேறு எந்த துயரத்தையும் இதற்கு இணையையாக காட்டிவிட முடியாது. என் முகநூல் பக்கத்தில் தினமும் எனக்‌கு பிடித்த சில வரிகளை மேற்கோள் காட்டி அன்றைய தொடர்பு லிங்கை கொடுப்பது என் வழக்கம். ஆனால் இன்று மொத்த பகுதியும் தான் கொடுக்க வேண்டும் போல. காலை நான்கு மணிக்கு படித்தது முதல் மோநோ ஏக்டிங்க் போல பீஷ்மர் , விதுரர், துரோணர் என பலர் வரிசையாய் வந்து வசனம் பேசிக்கொண்டே இருந்தனர் . உங்களுடன் தொலைபேசியில் பேசும் வரை அதை நிறுத்தமுடியவில்லை.

விஜய் சூரியன்