ஜெ
ஒரு வருஷம் கடந்து போய்விட்டது. இந்த வருஷத்தின் மிகச்சிறந்த அனுபவம் என்றால் அது வெண்முரசு நீலம் நாவல்தான். நீலத்தை வரிக்கு வரி வாசித்து பரவசம் அடைந்து சொக்கிப்போய் கிடந்தேன். இப்போது புத்தகமாக வாங்கி முழுமையாக வாசித்தேன். என்ன சொல்ல? மொழி என்பது இப்படி ஒரு கனவாகவே ஆகமுடியுமென்றல்லாம் எவராவது சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். கவிதைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் கவிதைகள் engrossing ஆக இருப்பது கிடையாது அவை துளித்துளியாக கிடைக்கின்றன. காவிய அனுபவம் என்பதுதான் அருவி மாதிரி நம் மீது கவிதை கொட்டக்கூடிய அனுபவம்தான். ஆறுமாதிரி அடித்துக்கொண்டு செல்லவேண்டும் அது
நீலம் நாவலை மீண்டும் ஒருமுறை இந்தவருடம் வாசிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நான் வைஷணவன் இல்லை. ஆனால் இந்தவருஷம் முழுக்க ஒரு மயில்பீலியை மனசுக்குள் வைத்திருந்தேன்
நன்றி ஜெ. அற்புதமான ஒரு வருஷத்துக்கு
செல்வா