இனிய ஜெயம்,
திரௌபதி பேசத் துவங்கி விட்டாள். முதல் உரையாடலே திரௌபதி எந்த எல்லை வரை செல்லக் கூடியவள் எனும் சித்திரத்தை உருவாக்கி விட்டது.
பொதுவாக ஆண்களுக்கு இரு வகையிலும் பெண்கள் தேவை. ஒன்று பரிபாலிக்கும் தாயாக, மற்றொன்று தன்னை அண்டிய பேதை சிறு பெண்ணாக.
பெண்களுக்கும் காமத்தில் தேடுதல் உண்டு. திரௌபதி இங்கு முன் வைப்பது அதன் ஆழம். காமத்தில் ஆடும் ஒருவன், காதலால் கரைத்தழிக்கும் ஒருவன்.
குருதி சிந்தாமால் மண ஏற்பு நிகழ்ந்தால் நன்றாகவா இருக்கும் என்ற கிண்டலும், இரண்டுமே வென்றால் நன்றாக இருக்கும் என்ற விழைவும், என்ன சொல்ல எந்த நிலையிலும் இணைஅற்ற அல்பா ஃபீமேல் திரௌபதி.
கர்ணனின் கவசம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவர் விழியில் ஒவ்வொரு விதமாக தெரிகிறது. முடி சூடுகையில் அபிஷேகத்தின் பொது, அதற்க்கு முன்னால் ஒரு குழந்தையின் பார்வையில், இப்போது திரௌபதி பொர்க் கவசம் எனக் கண்டது, அவள் மீதான கர்ணனின் தாபம் தானே?
கடலூர் சீனு