ஜெ,
நேராக பாஞ்சாலியின் சுயம்வரத்துக்கு போய் கதை முடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நடுவே இந்த நீளமான கோயில்தரிசனம் எதற்காக என்று யோசித்தேன். ஆனால் இந்த பிரில்யுட் இல்லாமல் சுயம்வரத்துக்குள் போகவே முடியாது என்று இப்போது தோன்றிவிட்டது.
முதலில் பாஞ்சாலியின் சித்திரம். இப்படி அவளை நுட்பமாக அறிமுகம்படுத்தியபிறகுதான் சுயம்வரப்பந்தலில் காட்டமுடியும். சுயம்வரப்பந்தலில் அவள் அலங்காரப்பொம்மையாகத்தான் வரமுடியும். இந்த டீடெய்லிங் இருக்காது இல்லையா?
அவளைப்பார்க்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அப்படி ஒரு நுட்பமான சித்திரம். துரியோதனனின் மனநிலை. கர்ணனின் குணச்சித்திரம். இப்போது பாஞ்சாலியைப் பார்க்கும்போது அவள் ஒரு துர்க்கை போலத்தான் இருக்கிறாள். அவளுடைய குணச்சித்திரத்தின் விவரணைகள் அருமை
அதிலும் அவளுக்கு பல ஆண்கள் தேவைப்படுவது. அவளுடைய பர்சனாலிட்டி ஐந்து மடங்கு பெரியது. அதற்கு ஐந்து மடங்கு உரவுகளும் தேவை. அவர்களின் குலத்திலேயே அந்த வழக்கம் உண்டு. ஆகவே அது தேவை என்பது நுட்பமாக வந்திருக்கிறது
இந்த அத்தியயாங்கள் வழியாக மிக சூட்சுமமாக பாஞ்சாலியை புரிந்துகொள்ளமுடிகிறது. அவளுடைய எல்லா முகங்களும் தெரிகின்றன
பசவராஜு